இலங்கையில் ரயில் சேவை ரத்து!! மதுபான கடைகள் காலவரையற்று மூடல்!!

கடந்த ஒரு மாதமாக இலங்கையில் அரசுக்கு எதிராக அமைதியான போராட்டம் நடைபெற்று வந்தது என்றால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததால் அத்தியாவசிய பொருட்களின் தேவை, பற்றாக்குறை மற்றும் விலையும் அதிகரித்தது.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது போராட்டக்களம் தீப்பிடித்து காணப்படுகிறது. ஏனென்றால் இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் போராட்டமானது கலவரமாக வெடித்துள்ளது. எனவே பல்வேறு விதமான சேவைகளை இலங்கை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் முழுவதும் கலவரம்  உள்ள நிலையில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இலங்கை முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் மதுபான கடைகளும் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது. இலங்கையில் கலவரம்  அதிகரித்து வரும் நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மதுபானக் கடைகள் மூடப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment