ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்குப் பாலம் மிகவும் புகழ் பெற்றது ஆகும். இங்கு பணிகளின் வசதிகளுக்கு ஏற்ப நாள்தோறும் அதிவிரைவு உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் மாண்டஸ் போன்ற புயலின் காரணமாக பாலம் சேதமடைந்துள்ளதால் தற்போது பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் டிசம்பர் 25 வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த 2 நேரம்.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
குறிப்பாக அதிக சத்தம் வருவதால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவ்வழியாக வரும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை – ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் பாம்பன் வரையில் இயக்கப்படும் எனவும், பாம்பன் – ராமேஸ்வரம் இடையே வரும் இரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குஷியோ குஷி!! ஜன-3 ம் தேதி நாகையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!
அதே போல் பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360548465 என்ற அலைபேசி எண்ணும், மண்டபம் ரயில் நிலையத்திற்கு உதவி மையம் 9360544307 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.