Connect with us

ரயில் தடம்புரண்டது: டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்தபோது விபரீதம்!

an

தமிழகம்

ரயில் தடம்புரண்டது: டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்தபோது விபரீதம்!

மதுரை ரயில் நிலையத்திலிருந்து டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்த இரயில் திடீரென தரம் புரண்டு விபத்துக்குள்ளானது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தண்டவாளங்களில் விரிசல் விடுவது போன்ற பிரச்சனைகளால் விபத்துக்கள் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

அந்த வகையில் மதுரை அருகே வாடிப்பட்டி அருகே இருந்த டிராக்டர் தொழிற்சாலையில் இருந்து டிராக்டர்களை வடமாநிலங்களுக்கு ஏற்றிச் செல்வதற்காக இன்று அதிகாலையில் சரக்கு இரயில் வந்தது. ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த போது அந்த ரயிலில் இருந்த 2 பெட்டிகள் தண்டவாளத்தை உரசி நின்றது.

தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ரயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் விபத்து நடந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top