விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படத்தின் மாஸான ட்ரைலர் இதோ!

தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோவாக நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.டாக்சி வாலா ,டியர் காம்ரேட் என பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவருகிறார், இந்தப்படத்தின் படப்பிடிப்பு காஸ்மீரில் நடந்து வருகிறது, மேலும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாக உள்ளது.

download 2022 07 21T142304.911

பூரி ஜெகநாத் இயக்கும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான இந்த விழா நடைபெறவிருக்கும் இடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு 75 அடியில் கட்டவுட் வைத்துள்ளார்கள் அவரது ரசிகர்கள்.

legar

விஜய் தேவர்கொண்ட குத்துசண்டை வீரராக நடித்துள்ள இந்த படம் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.இந்த படத்தில் பிரபல குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.

Liger 965

இப்படத்தினை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்கிறார். சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது,

விரைவில் நயன்தாரா – விக்னேஷ் திருமண வீடியோ! நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

லயனுக்கும் டைகருக்கும் பொறந்தவன்… கிராஸ் பரீட் சார் என் பையன் என ரம்யா கிருஷ்ணன் பேச்சில் தொடங்குகிறது ட்ரெய்லர். இதோ …

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment