
பொழுதுபோக்கு
ஹன்சிகாவின் 50தாவது படமான மஹா படத்தின் டிரெய்லர் ! வைரல் வீடியோ
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, 2007-லிருந்து தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போழுது ஐம்பதாவது படத்தை நிறைவு செய்துள்ளார்.ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. ஜமீல் இயக்கியிருக்கும் இந்தப் படம் தொடங்கி பல வருடங்கள் ஆகிறது.
ஹன்சிகாவின் 50வது படமான மஹா படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் 40 நிமிடங்களில் நடித்துள்ளார் . பலமுறை இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது மஹா திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஹா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஹன்சிகா, ஆரி, ஆர்கே.செல்வமணி, கே.ராஜன், இயக்குனர் சீனு ராமசாமி, லக்ஷ்மன், நந்தா பெரியசாமி, விஜய் சந்தர், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட பல முன்னணி நட்ஷத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சீனு ராமசாமி இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, படத்திற்காக ஹன்சிகாவுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.ஹன்சிகா பேசும்போது இப்படம் எனக்கு புதிய அத்தியாயம். எனக்கு ஸ்பெஷலான படமும் கூட. இந்த கதையை எனக்குக் கொண்டு வந்த இயக்குநருக்கு நன்றி.
விக்ரம் ரசிகர்களுக்காக பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
