வேர்ல்ட் கப்-பில் திரில் வெற்றி! 11 முறையும் வச்சி செஞ்ச இந்தியா; படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்!!!
தற்போது உலக அளவில் மகளிருக்கான வேர்ல்ட் கப் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டி நியூசிலாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி உள்ளது. நியூசிலாந்தில் இன்று நடந்த போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டை இழந்து 50 ஓவர் முடிவில் 244 ரன் குவித்தது.
இதனால் 245 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 52 ரன்கள் எடுத்திருந்தார். தீப்தி சர்மா 40 ரன்கள், பூஜா 67 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 9 ரன்களில் என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அளித்தனர். ஆனால் பாகிஸ்தானோ வெறும் 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 11 வது முறையாக பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றி பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
