குன்றத்தூர் அருகே சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி காதலன் கண் முன்னே காதலி உயிரிழந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது.
ஆவடியை சேர்ந்தவர் அஜித்(22), தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவரது காதலி செல்வி(21), பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இன்று இருவரும் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அஜித் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துள்ளான மோட்டார் சைக்கிள் சாலையில் சிறிது தூரம் சென்று தடுப்பு சுவரின் மீது ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.