முன்னாள் முதல்வர் வீட்டில் நடந்த துயர சம்பவம்! பேத்தி தூக்கிட்டு தற்கொலை?
தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் தற்கொலை எண்ணம் அதிகமாக காணப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
பல பிரச்சினைகளை சந்திக்க முடியாததால் அவர்கள் தங்களது உயிரை தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். வரிசையாக பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளினால் தற்கொலை செய்து கொள்பவர்கள் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வரின் வீட்டில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் வீட்டிலேயே இவ்வாறு தற்கொலை நிகழ்ந்துள்ளது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
அதன்படி கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு வயது 30 ஆகும். பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஏனென்றால் இது தற்கொலையா? இல்லை வேறு ஏதாவது நிகழ்ந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
