கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்!! கர்நாடகாவில் பரபரப்பு!!

கர்நாடகா மாநிலம் துமகூரு டவுன் பகுதியில் வசித்து வருபவர் 30 வயதான கஸ்தூரி. தமிழகத்தை சேர்ந்த இவர் 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இவருடைய கணவர் மரணம் அடைந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மக்களே உஷார்! 11 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!!

இதன் காரணமாக அருகில் இருந்தவர்கள் கஸ்தூரியை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவர் உஷா என்பவர் கஸ்தூரியிடம் தாய் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கேட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் 2 அட்டைகளும் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சூழலில் பிரசவ வலியில் துடித்த அவருக்கு நேற்று காலை இரட்டை ஆண் குழந்தை பிறந்து.

ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் புகார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதே சமயம் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் தாயும் 2 சேயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment