Connect with us

கனவால் நடந்த விபரீதம்: ஆப்பிரிக்காவில் பயங்கரம்!!

health men health 4

செய்திகள்

கனவால் நடந்த விபரீதம்: ஆப்பிரிக்காவில் பயங்கரம்!!

மேற்கு ஆப்பிரிக்கா அடுத்த கானா நாட்டைச் சேர்ந்தவர் கோஃபி அட்டா. இவர் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோஃபி மதிய வேலையில் உறங்கியதாக கூறப்படுகிறது.

அப்பொது கனவில் ஆடு வெட்டுவதாக தோன்றியதால் தூக்க கலக்கத்தில் தன்னுடைய ஆடு என நினைத்து தன்னுடைய அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை தவறுதலாக வெட்டியுள்ளார்.

இந்நிலையில் வலியால் தூக்கம் கலைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் துடிதுடித்து இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் வீட்டில் யாரும் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இதனிடையே அவருடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கோஃபியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

அதோடு ஒரு அறுவை சிகிச்சைசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் வீட்டில் சுமார் ஒன்றரை மாதம் ஓய்வெடுத்தால் மீண்டும் பழைய நிலை திரும்பி விடுவார்கள் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top