பிரச்சாரத்தில் நிகழ்ந்த சோகம்; திமுக பெண் வேட்பாளர் மரணம்! தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?
இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகின்றது. ஏனென்றால் இன்று மாலை ஆறு மணிக்கு தேர்தல் பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் வரிசை கட்டி தேர்தல் பரப்புரை நடந்துகொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்களும் வேட்பாளரின் மரணமும் நிகழ்ந்து கொண்டே வருகிறது.
அதன்படி திமுக வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின்போது மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி உட்பட்ட 9வது வார்டில் களமிறங்கியுள்ள திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்தார்.
58 வயதான திமுக பெண் வேட்பாளர் அனுசுயா பிரச்சாரத்தின் போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் மட்டுமின்றி தமிழகத்தில் பல பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் திடீர் மரணம் அடைவது கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
