Connect with us

படகுப் போட்டியில் விபரீதம்: படகு கவிழ்ந்து 2 பேர் பலி!!

boat 1

செய்திகள்

படகுப் போட்டியில் விபரீதம்: படகு கவிழ்ந்து 2 பேர் பலி!!

கேரளாவில் படகுப்போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற படகு ஆற்றில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் பத்தணந்திட்டா மாவட்டம் ஆறான்முளா அடுத்த சென்னித்தலா பகுதியில் படகு போட்டி நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படகு போட்டில் கலந்து கொள்வதற்காக ஒரு படகு சென்றது.

அப்போது படகில் இருந்தவர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் துடுப்பு போட்டபடி சென்றனர். இதில் எதிர்பாராதவிதமாக படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர்.

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2பேரை சடலமாக மீட்டனர்.

அதோடு 2 பேரில் உடலை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top