அதிமுக வட்டாரத்தில் தொடரும் சோகம்…. தள்ளிக்கொண்டே போகும் ஒருங்கிணைப்பாளர் தேர்தல்!

தமிழகத்தில் தற்போது எதிர்கட்சியாக காணப்படுகிறது அதிமுக. தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்த ஆளுங்கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த அதிமுக கட்சி சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அதேவேளையில் இனை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் திகழ்ந்துள்ளார். அதிமுக கட்சியில் டிசம்பர் 7ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வந்த அதிமுக தொண்டர்கள் அடுத்தடுத்து அடித்து விரட்டி அடிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் அதிமுக தரப்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment