Connect with us

குறுக்கே வந்த நாய்!! அரசு பேருந்து ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்!!

நாய்கள்

தமிழகம்

குறுக்கே வந்த நாய்!! அரசு பேருந்து ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சுபா நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அரசு பேருந்தின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக நாய் ஒன்று இருசக்கர வாகனத்தின் குறுக்கே சென்றது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சீனிவாசன் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சூழலில் நேற்று அதிகாலை சீனிவாசன் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. தற்போது சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தெரு நாய்களால் பாதிப்பு ஏற்படுவதாக கோவில்பட்டியில் இருக்கும் அதிகாரிகளுக்கு  பலமுறை புகார் அளித்தும் அலட்சியமாக இருந்ததே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top