கார் டயர் வெடித்ததால் விபரீதம்: ஐயப்ப பக்தர் பலி!

அவிநாசியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐயப்ப பக்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வசிக்கும் மோகன் என்ற ஐயப்ப பக்தர் ஒருவர் உட்பட 4 பேர் சபரிமலைக்கு காரில் சென்றனர். அதிகாலையில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

கடலூரில் 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு..!!

அப்போது பழங்கறை அருகே காரில் இடதுபுற டயர் வெடித்து சிதறி உள்ளது. இதனால் சாலையில் அருகில் இருந்த தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

அதே போல் ஓட்டுனர் உட்பட 2 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்து விரைந்து போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திமுகவில் பரபரப்பு! கூட்டுறவுத் துறை செயலாளர் சென்ற கார் விபத்து.!

மேலும், விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் டயர் வெடித்ததால் ஐயப்ப பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.