இயக்குனர்-இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில் நடந்த சோகம்!

a8596f66c7e20e12f18b09ccec711d1b

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில் நடந்த சோகத்தை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

கரகாட்டக்காரன் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் கங்கை அமரன் என்பதும் அவர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை அமரன் அவர்களின் மகன் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என்பதும் அவரது இன்னொரு மகன் பிரேம்ஜி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

00b89dcec7c771bfd82af85dc40d33d3

இந்த நிலையில் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் என தெரிகிறது 

மறைந்த மணிமேகளை அவர்களுக்கு வயது 69. கங்கை அமரனின் மனைவி மணிமேகலை அவர்கள் மறைவை அடுத்து திரையுலகினர் கங்கை அமரன் குடும்பம் நேரிலும் தொலைபேசியிலும் தங்களது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.