தேவர் குரு பூஜையில் சோகம்! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!!

தேவர் குருபூஜையின் போது மின்சாரம் தாக்கி கல்லூர் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்றைய தினத்தில் தேவர் குருபூஜை கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசியில் தேவர் குருபூஜைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

திடிரென வந்த வெள்ளம்! 3 மாணவர்கள் இழுத்து சென்ற விபரீதம்..!!

இந்நிலையில் அரசு கல்லூரியில் படித்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் கொடிகம்பம் நடும் பணியில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் முத்துக்குமார் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

நாட்டை உலுக்கிய கொடூரம்: 4 பேர் மீது வழக்குப்பதிவு!

இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment