போக்குவரத்து விதிமீறல்கள்: தமிழக அரசு புதிய நடைமுறைகள் அரசிதழில் வெளியீடு

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புதிய நடைமுறைகளை மாநில அரசு செவ்வாய்க்கிழமை அரசிதழில் வெளியிட்டது.

அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் இங்கே:

சாலை போக்குவரத்தை கண்காணிக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்தை கண்காணிக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், மின்னணு அமலாக்க சாதனங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.

போக்குவரத்து காவலர்கள் தங்கள் ஆடைகளில் கேமராவை பொருத்தி (உடல் கேமராக்கள்) வாகன போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.

டேஷ்போர்டில் கேமரா பொருத்தி போக்குவரத்து போலீஸ் வாகனங்களில் போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.

ஜூலை மாதம் சைல்டு ஹெல்ப்லைன் சேவை – மாநில அரசு

அபராதக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.