Tamil Nadu
முடிவுக்கு வருகிறது போக்குவரது நெரிசல்: சென்னையில் கட்டப்பட்டு வரும் பாலங்கள்!
சென்னையில் பல ஆண்டு காலமாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சென்னையில் தற்போது ஒரு சில பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் இந்த பாலங்கள் பணி முடிவடைந்து விட்டால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அந்த பாலங்கள் என்னென்ன என்று பார்ப்போம்
* மேடவாக்கம் (தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதி) மற்றும் வேளச்சேரி மேம்பாலம் மதிப்பு ரூ. 203.21 கோடி
* கோயம்பேட்டில் சாலை மேம்பால பணிகள். மதிப்பு ரூபாய் 93.50 கோடி
* திருவான்மியூர் சந்திப்பில் உள்ள சாலை மேம்பால பணிகள். மதிப்பு ரூபாய் 219.92 கோடி
* ஈ.வே.ரா. சாலையில், ராஜா முத்தையா சாலை சந்திப்பு முதல் புல்லா நிழற்சாலை சந்திப்பு வரை உயர்மட்ட பாலம்
* அண்ணாநகர் 3ஆவது நிழற்சாலை மற்றும் ஈ.வெ.ரா. சாலையை இணைத்து மேம்பாலம்
* திருவற்றியூர் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே மற்றும் பருத்திப்பட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு ஆற்றுப்பாலங்கள். மதிப்பு ரூபாய் 77.01 கோடி
