சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்!

கனமழை எதிரொலியால் சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரம் ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகனம் சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணாசாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கேகே நகர் ஜி.எச் எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் சீரமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்திசையில் அனுமதிக்கப்படுகிறது

அதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக்பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

chennai traffic

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print