சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம்!

கன மழை மற்றும் சாலையில் செய்யப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1. மழைநீர்‌ பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்‌:

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள்‌ தி.நகர்‌, பசூல்லா சாலையில்‌ தேங்‌கியுள்ள மழைநீரை வெளியேற்றும்‌ பணியை மேற்கொண்டு ‘வருவறார்கள்‌. இதன்‌. காரணமாக ஜி.என்செட்டிசாலை-வாணிமஹால்‌ சந்‌திப்பிலிருந்து பசூல்லா ‘சாலை நோக்கி‌ செல்லும்‌ வாகனங்கள்‌ ஜி.என்‌.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக இருப்பிவிடப்படுகிறது.

2. சென்னை மாநகர மழைநீர்‌ வடிகால்‌ வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌. இதன்‌ காரணமாக கே.கே.நகர்‌ ஜி.எச்‌.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில்‌ வடிகால்‌ நீர்‌ அமைக்கும்‌ பணியை. எளிதாக்கும்‌ வகையில்‌, உதயம்‌ திரையரங்கம்‌ நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்‌ திசையில்‌
அனுமதிப்க்கப்படுகிறது.

இதேபோல்‌ உதயம்‌ சந்திப்பில்‌ காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கு செல்லும்‌ ‘கனரக வாகனங்கள்மட்டும்‌ அசோக்‌ பில்லர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

3. சாந்தி காலனி 4வது அவென்யூலில்‌ மெட்ரோ கழிவுநீர்‌ கால்வாயை சுத்தம்‌ செய்யும்‌ பணியை மேற்கொண்டு வருவதால்‌, திருமங்கலம்‌ நோக்கி செல்லும்‌ வாகனங்கள்‌ 3வது அவென்யூவில்‌ இருந்து 2வது அவென்யூ நோக்கி திருப்பி விடப்படுகிறது.

4. மதுரவாயில்‌ பைபாஸ்‌ சாலை சர்வீஸ்‌ சாலையில்‌ இருந்து அத்திப்பட்டு போகும்‌ சாலையில்‌ உள்ள தரை பாலத்தில்‌ அதிகமாக தண்ணீர்‌ செல்வதால்‌ சாலையின்‌ இருபுறமும்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

5. பூந்தமல்லி நெடுஞ்சாலையில்‌ இருந்து ரயில்‌ நகர்‌ செல்லும்‌ சாலையில்‌ உள்ள தரை பாலத்தில்‌ அதிகமாக தண்ணீர்‌ செல்வதால்‌ சாலையின்‌ இருபுறமும்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுவிவரம்‌ :-

சென்னையின்‌ பல பகுதிகளில்‌ மழை பெய்து கொண்டிருக்கிறது. இம்மழையின்‌ காரணமாக தண்ணீர்‌ தேங்குவதோ, மற்றும்‌ எவ்வித போக்குவரத்து இடையூறும்‌ இல்லை.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment