Connect with us

‘செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா’….சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!!

traffic9

தமிழகம்

‘செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா’….சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!!

இன்று மாலை தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த நிறைவு விழாவானது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்களை வழங்குகிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மகேந்திர சிங் டோனி அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிக ஏற்பட வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது. எனவே இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை ஒட்டி மதியம் 1:00 மணி முதல் சூழலில் நெடுஞ்சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியை செல்ல எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.

பிவிகே சாலை ஜெர்மனையா சாலை சந்திப்பில் இருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top