மழைநீர் -சென்னையில் போக்குவரத்து மாற்றம்; வேறு பாதைக்கு செல்லும் வாகனங்கள்!

தமிழகத்தில் தொடர் கனமழையால் பல பல மாவட்டங்கள் மழை நீருக்குள் மூழ்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகவே மழை தேங்கி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

tunnel6 1

அதோடு சென்னையில் உள்ள பல சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வடிகால் அமைக்கும் பணியால் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் அதன் எதிர் திசையில் அனுமதிக்கப்படுகின்றன. உதயம் திரையரங்க தொடங்கி அண்ணா பிரதான சாலை செல்லும் கனரக வாகனங்கள் அசோக்பில்லர் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.

ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர் போக்குவரத்து காவல்துறை. கே.கே. நகர் ராஜமன்னார் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. வாணி மஹால்-பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அங்கு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து காமாட்சி மருத்துவமனை வழியாக வாகனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment