சென்னையில் தொடரும் தடை: 7ல் இருந்து 9 ஆக சாலைகளில் போக்குவரத்து தடை அதிகரிப்பு!

நேற்று இரவு முதல் தலைநகர் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை தலைநகர் சென்னையில் 7 சாலைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இவை தற்போது ஒன்பதாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சாலைகளில் போக்குவரத்து தடை

அதன்படி சென்னையில் மழை நீர் தேக்கத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்ட சாலைகளின் எண்ணிக்கை 7 இல் இருந்து 9 ஆக மாறியுள்ளது.

  1. பள்ளிக்கரணை 200 அடி சாலையில் காமாட்சி மருத்துவமனை முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை தடை செய்யப்பட்டுள்ளன.
  2. சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழி சாலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  3. கே.கே நகர் முதல்  இராஜமன்னார் சாலை வரை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
  4. மயிலாப்பூர் முதல் டாக்டர் சிவகாமி சாலையிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  5. ஈசிஆர் சாலையில் காந்தி-இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன.
  6. செம்பியம் முதல் ஜவஹர் நகர் வரை உள்ள சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  7. வியாசர்பாடி தொடங்கி முல்லை நகர் காலம் வரையிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  8. பெரவள்ளுர் தொடங்கி 70 அடி சாலைகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
  9. புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, அம்பேத்கர் சாலைகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment