ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடி, உதயநிதி ரூ.50 கோடி, டி.ஆர். பாலு ரூ.100 கோடி.. அண்ணாமலைக்கு நோட்டீஸ்..!

திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ரூ.500 கோடியும் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 50 கோடியும் கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு ரூபாய் 100 கோடி கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவரது மகன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக எம்பி கனிமொழி உள்பட திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த சொத்து பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அண்ணாமலை மீது வழக்கு தொடுக்க உள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

1851206 annamalai1இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, அண்ணாமலை அவதூறாக திமுகவினர் குற்றச்சாட்டு கூறியுள்ளார் என்றும் அண்ணாமலை மன்னிப்பு கேட்கப்பட்டால் ரூபாய் 500 கோடி கேட்டு வழக்கு தொடர்வோம் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதனை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வழக்கறிஞர் வில்சன் மூலம் அனுப்பிய நோட்டீஸில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய அண்ணாமலை மீது ரூபாய் 50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்குப்பதிவு செய்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு 100 கோடி ரூபாய் கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் அண்ணாமலை வீடியோ வெளியிட்டதற்காக 100 கோடி ரூபாய் இழப்பு வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 48 மணி நேரத்திற்குள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.