பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியஇயக்குனர் டி.பி கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று

இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் டி.பி  கஜேந்திரன் பின்னர் இயக்குனராக அந்தஸ்து பெற்று எங்க ஊரு காவல்காரன் படத்தை இயக்கினார்.

கார்த்திக்கை வைத்து இவர் இயக்கிய பாண்டி நாட்டு தங்கம் படம் நல்ல வெற்றி பெற்றது.

சில வருடங்களுக்கு முன்பு வரை மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா 007, பந்தா பரமசிவம், உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

அவ்வப்போது நகைச்சுவை கதாபாத்திரங்களில்  நடித்து வந்தார் இவர்.

பார்த்திபனுடன் இவர் நடித்த புளாசுளாக்கி என்ற காமெடி புகழ்பெற்றது.

இவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டி.பி கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது திரைத்துறையினரை கவலை கொள்ள செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment