டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம் தமிழகத்தை பொறுத்த வரையில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் என்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் துணை தலைவர் விக்ரம் எஸ் கிர்லோஸ்கரி ( வயது 64) மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அதோடு கடந்த 1990 ஆண்டில் ஜப்பான் டொயோட்டா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கு இவரது பங்கானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
இவரது மரணம் குறித்து யோகான் நிறுவனத்தின் செயல் தலைவரான கிரண் மசூம்தார் ஷா கூறுகையில், “ விக்ரமின் மறைவானது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், வாழ்கையின் உண்மையான நண்பனை இழந்துவிட்டதாக கூறியுள்ளார். இவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.