கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளிவந்த விஷவாயு: ஒப்பந்ததாரர்கள் 3 பேர் உயிரிழப்பு..!3 பேர் கைது;

பல்வேறு விதமான செயல்களுக்கு நம் தமிழகத்தில் தடை உள்ளது. அதில் ஒன்றுதான் கழிவுநீர் தொட்டியில் நேரடியாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வேலை செய்வது. தடை விதிக்கப்பட்டாலும் ஆங்காங்கே மறைமுகமாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.

இதில் விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டியில் பணி செய்பவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் விஷவாயு தாக்கி 3 மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பை சரி செய்த 3 மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளிவரும் இந்த விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். நேரு நகரில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் போது விஷவாயு தாக்கியது.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் சிவகுமார், லட்சுமணன் மற்றும் சரவணன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 நாட்களாக அடைப்பை சரி செய்து வந்த நிலையில் இன்று வெளிவந்த விஷவாயு அவர்களை தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதனால் இவர்கள் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment