தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ கூடாது என அம்மாவட்ட ஆட்ரியர் நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதோடு பொதுமக்களின் நலன் கருதி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை முற்றிலும் தடை விதிக்கப் படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது 3-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மாலை 60 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது ஒரு லட்சமாக அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 3-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.