குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு 3-வது நாளாக தடை..!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் ஓடைகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐந்து அருவி, சினி பால்ஸ், மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் பொது மக்களின் நலன் கருதி இன்று குற்றால அருவியில் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் தொடர்ந்து  3 -வது  நாளாக தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அதேபோல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். அதே போல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகாலை முதலில் பக்தர்கள் புனித நீராடினர். மேலும், ராமநாத சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment