Connect with us

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்த நீர் ஊற்று-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

cuttralam

செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்த நீர் ஊற்று-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

நம் தமிழகத்தில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக இன்றைய தினம் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பல இடங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தேனி மாவட்டத்தில் பிரதான நீர்வீழ்ச்சியாக காணப்படுகின்ற சுருளியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு சுற்றுலா தளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது. அதன்படி தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை .

மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சென்றவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top