100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; சுற்றுலா சென்ற இருவர் மரணம்!

குன்னூர் மலைப்பாதையில் நேற்று நள்ளிரவில் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வந்த கார் நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணகிரி மற்றும் சத்யா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு செங்கல்பட்டு பகுதியில் இருந்து செந்தில் மற்றும் அவரது உறவினர்கள் சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா முடிந்து உதகையில் இருந்து செங்கல்பட்டு மதுராந்தகம் சென்று கொண்டிருந்தார் கார் ஒன்று குன்னூர்‌ மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் பகுதியில் கட்டுபாட்டினை இழந்து நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய செந்தில், பூவா வானம்,சம்பத், சத்யா, அருணகிரி, ஆகிய ஐந்து நபர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரையும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து குன்னூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மற்றும் சத்யா மற்றும் அருணகிரி ஆகிய இருவர் உயிரிழந்தனர். சுற்றுலா வந்து விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.