ஒரு முடிவாக உள்ள சசிகலா! கட்சி இரண்டாக பிளந்து விடுமோ? ஒரு வாரம் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம்!!

சசிகலா நம் தமிழகத்தில் எதிர் கட்சியாக உள்ளது அதிமுக. இந்த அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அதிமுக கட்சியின் பொன்விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

இதில் பலரும் எதிர்பார்க்காத வண்ணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா அதிமுக கொடியுடன் கூடிய காரில் சென்று,ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் கட்சிக்குள்ளேயே பல்வேறு குழப்பங்கள் காணப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் தற்போது சசிகலா ஒரு வார காலத்திற்கு தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அந்த சுற்றுப்பயணத்தில் ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா திட்டம் போட்டு வைத்துள்ளார். ஆதரவாளர்களையும்,  அதிமுகவினர்களையும்,  சந்திக்க சசிகலா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற 26ம் தேதி தஞ்சை செல்கிறார் சசிகலா. 27ம் தேதி டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்கிறார். 28ம் தேதியில் நெல்லையில் தொண்டர்களை சந்தித்து சசிகலா கலந்துரையாட உள்ளார்.

29ம் தேதியில் ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.30ம் தேதியில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கிறார். நவம்பர் 1ஆம் தேதியில் தஞ்சாவூரில் தொண்டர்கள் ஆதரவாளர்களை சந்தித்து சசிகலா கலந்துரையாட உள்ளார் .

சசிகலா மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் எடப்பாடி தரப்பினர் புகார் அளித்த நிலையில் தொண்டர்களை சந்திக்க இவ்வாறு திட்டம் வகுத்துள்ளார் சசிகலா.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment