மொத்தம் 269 முகாம்கள்; நாளைக்குள் சென்னை முழுவதும் சரிசெய்யப்படும்!: அமைச்சர் உறுதி;

தலைநகர் சென்னையில் பெய்த மழையால் வீடுகள் அனைத்திலும் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் அனைவரும் தாழ்வான பகுதிகளில் இருந்த அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

முகாம்

இது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தகவல் அளித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் 269 முகாம்கள் உள்ளன. இந்த 269 முகாம்களில் 14 ஆயிரத்து 135 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து இத்தகைய தகவல்களை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் மட்டும் 44 முகாம்கள் உள்ளன. இந்த 44 நிவாரண முகாமில் 2699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

கடந்த காலங்களைவிட மழை காலங்களில் ஏற்பட்ட உயிர்இழப்பை விட தற்போது மிகவும் குறைவாக உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த காலத்தில் மழை வெள்ளத்தால் 31 ஆயிரத்து 451 குடிசைகள் சேதம் அடைந்திருந்தன.

அதோடு மட்டுமில்லாமல் சென்னை மழைநீர் தேங்கியது குறித்தும் சில அறிவிப்புகளை கூறியுள்ளார். அதன்படி சென்னை மாநகரம் முழுவதும் சீர் செய்யப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக சேதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகவே ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 2584 குடிசைகள் மட்டுமே சேதமடைந்துள்ளன என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment