மொத்தமே காலையில ஒரு மணி நேரம், நைட் ஒரு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கணும்!!

தீபாவளி

இன்னும் சில நாட்களில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல மாநிலங்களில் ஏற்பாடுகள் மிகவும் வேகமாக நடைபெறுகிறது.  ஒரு சில மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.தீபாவளி

அதன் தொடர்ச்சியாக சென்னையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று சென்னை மாவட்ட காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அறிவித்துள்ள நேரத்தை பின்பற்ற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

கடந்தாண்டு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக முன்னூற்றி ஐம்பத்தி மூணு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் சங்கர் ஜிவால் கூறினார் .

சென்னையில் 683 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார். தீபாவளி அன்று சென்னையில்  18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print