Connect with us

1-அல்ல, 2-அல்ல மொத்தம் 18 விருது: இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்!!

லிங்குசாமி

தமிழகம்

1-அல்ல, 2-அல்ல மொத்தம் 18 விருது: இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்!!

சினிமா திரையுலகை பொறுத்தவரையில் இன்றைய தினம் மிக முக்கிய தினமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையிக் இன்றைய தினத்தில் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், சூர்யா, விஷால் போன்றவர்களின் படங்கள் மூலம் இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி.

இவர் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நடிப்பெறும் திமுக ஆட்சியில் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பாக எடுத்து நடத்தியதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதோடு திருப்பதி பிரதர்ஸ்க்கு கடந்த 2009 முதல் 2014 வரையில் சுமார் 18 விருதுகள் வழங்கிய, அதாவது கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, பையா உள்ளிட்ட படங்களுக்கு விருது வழங்கியதாக கூறினார்.

அதோடு இந்த படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் உடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் இத்தகைய விருதானது மீண்டும் நினைவூட்டியதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top