மொத்தம் 10 லட்சம்! ஆனால் தமிழகத்திற்கு 58 ஆயிரத்து 881 குப்பிகள்!

a68e6fd448dca0209f9b199acfdffaa4

தற்போது அந்த வகையில் ஆட்கொல்லி நோயாக காணப்படுகிறது கொரோனா.ஆனால் பல்வேறு நாடுகள் பல்வேறு விதமான கொரோனா மருந்துகளையும் தடுப்பூசியின் கண்டுபிடித்து  வருகிறது. இந்தியாவின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அவை பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன, இந்நிலையில் நேற்றைய தினம் மத்திய அரசின் சார்பில் 10 லட்சம் ரெம்டிசிவிர் குப்பிகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது.

678d874ab81512ee501cb36d15a454b4

மேலும் அவற்றில் தமிழகத்திற்கு 58881 குப்பிகள் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரெம்டிசிவிர்  குப்பிகள் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2.69 லட்சம் வழங்கப்படுகிறது. அதனையடுத்து குஜராத்திற்கு 1.43 லட்சம் குப்பிகள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது .உத்திரப்பிரதேசத்தில் 1.22 லட்சம் குப்பிகள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தலைநகர் டெல்லிக்கு 61825 குப்பிகள் அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தை போன்று ஆந்திராவுக்கும் 58 ஆயிரத்து 881 குப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுவரை மாதம் ஒன்றுக்கு 38 லட்சம் குப்பிகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் அதனை 74 லட்சம் குப்பிகளாக அதிகரிக்க செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரெம்டிசிவிர் உற்பத்தி செய்ய கூடுதலாக 20 ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்க பட்டதாக கூறபடுகிறது.மேலும் தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தற்போது இந்த ரெம்டிசிவிர்  குப்பிகள் குறைவாக பட்டதால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment