பொதுவா டாப் நடிகர்களின் படங்களில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் அல்லது ஓரளவிற்கு பிரபலமான நடிகர்கள் இணைந்து நடித்தால் அவர்களின் மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் நிச்சயம் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என கூறுவார்கள். அதேபோல் பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.
ஆனால் டாப் நடிகருடன் இணைந்து நடித்து காணாமல் போன நடிகர்களும் உள்ளார்கள். அந்த வரிசையில் கோலிவுட்டில் உலக நாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து தங்களின் மார்க்கெட்டை இழந்த நடிகர்கள் குறித்து தான் இதில் பார்க்க போகிறோம்.
அதன்படி முதலாவதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் மாதவன். ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருந்த மாதவன் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அன்பே சிவம் என்ற படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார். படம் என்னமோ ஹிட்டுதான். ஆனால் அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் மாதவனின் நிலை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார்.
இவரை தொடர்ந்து மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு என பல வெற்றி படங்களைக் கொடுத்த நடன இயக்குனர் பிரபு தேவா காதலா காதலா என்ற படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு அவரின் சினிமா வாய்ப்பும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
அதேபோல் இயக்குனர் மௌலி இயக்கத்தில் வெளியான பம்மல் கே சம்பந்தம் என்ற படத்தில் கமலுடன் அப்பாஸ் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து மொத்தமாக விலக்கி வைக்கப்பட்ட அப்பாஸிற்கு தற்போது வரை பட வாய்ப்புகள் இல்லை. தற்போது முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் அப்பாஸ் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.