Connect with us

“இந்தியாவின் டாப் 8 கோடீஸ்வரர்கள்”: அடிக்க முடியாத இடத்தில் “அம்பானி”!!

https://tamilminutes.com/?p=90584&preview=true#
richmens

“இந்தியாவின் டாப் 8 கோடீஸ்வரர்கள்”: அடிக்க முடியாத இடத்தில் “அம்பானி”!!

தற்போது நம் நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மிகப் பெரிய கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.முகேஷ் அம்பானி

மேலும் இவர் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவின் டாப் 8 வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

கவுதம் அதானி அவரின் சொத்து மதிப்பானது 6.3 லட்சம் கோடிக்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

அவரின் சொத்து மதிப்பு 5.59 லட்சம் கோடி ஆக காணப்படுகிறது. மேலும் அதனை வரிசையில் மூன்றாவது இடத்தினை ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடார் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பானது 2.31 லட்சம் கோடியாக காணப்படுகிறது.

அவர்களைத் தொடர்ந்து 4வது இடத்தில் தொழிலதிபர் ராதா கிஷ்ண தாமனி உள்ளார் அவரின் சொத்து மதிப்பானது 2.19 லட்சம் கோடியாக காணப்படுகிறது.

மேலும் ஐந்தாவது இடத்தினை தடுப்பூசி நிறுவனமான சீரம் நிறுவனத்தின் சேர்மன் சைரஸ் பூனவாலா உள்ளார் அவரின் சொத்து மதிப்பு 1.42 லட்சம் கோடியாக உள்ளது.

லட்சுமி மிட்டல்ஆறாவது இடத்தில் லட்சுமி மிட்டல் உள்ளார் அவரின் சொத்து மதிப்பு 1.40 லட்சம் கோடியாக காணப்படுகிறது.

ஏழாவது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் உள்ளார் அவரின் சொத்து மதிப்பானது 1.34 லட்சம் கோடியாக காணப்படுகிறது.

8வது இடத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் இயக்குனர் உதய் கோட்டக் அவரின் சொத்து மதிப்பு 1.23 லட்சம் கோடியாக காணப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top