செம்ம வைரல்..! Tooth brush ஆல் பல் துலக்கிய முதலை..
காலையில் எழுந்தவுடன் மனிதர்கள் செய்யும் முதல் செயல் பல் துலக்குவது. ஆனால் டூத் ப்ரஷால் முதலை பல்துவக்குவது போன்ற நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பான வீடியோ ஓன்று இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வன உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த காட்சி தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
அந்த வீடியோவில் அமெரிக்க யூடியூபர் ஜே பொரோவர் சிறிய முதலை குட்டியினை தனது கைகளினால் தாங்கியுள்ளார்.
தென்னை என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வெண்நிறமான பெண் முதலை குட்டி ஆல்டினோ இனத்தை சேர்ந்தது. அந்த குட்டி முதலையினை ஜெ டூத் ப்ரஷாலால் சொரிந்து கொடுக்க முதலையோ வாயை திறந்து காட்டுகிறது.
அந்த காட்சி முதலை பல் துலக்குவது போன்று இருப்பதாக இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
