நாளைய தினம் கலக்கப் போகிறது கடைசி விவசாயியின் முன்னோட்டம்!

தமிழ் சினிமாவில் நிலைக்க வேண்டுமென்றால் கடின உழைப்பு, விடாமுயற்சி மட்டும் போதாது பொறுமையோடு காத்து இருந்தாலும் மிக அவசியமாக காணப்படும். அதற்கு நல்லதொரு உதாரணமாக தற்போது தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டு உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

 கடைசி விவசாயி

இவர் ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாபாத்திரமாக நடித்து அதன் பின்னர் தற்போது மிகப்பெரிய முன்னணி கதாநாயகனாக வலம் வந்து வருகிறார். இந்த நிலையில் அண்மைக்காலமாக இவர் நடிப்பில் வெளியான லாபம், அனபெல் சேதுபதி போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இருப்பினும் விஜய்சேதுபதி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தனது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது திரைப்படம் கடைசி விவசாயி.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் நாளைய தினம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிறது. அதன்படி விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் கடைசி விவசாயி திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் இந்த படத்தினை இயக்குகிறார். வயதான விவசாயி பாத்திரத்தில் நல்லாண்டி என்பவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment