
தமிழகம்
ஊரடங்கு இருக்குமோ! முதல்வர் தலைமையில் நாளைய தினம் ஆலோசனை!!
பலரும் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டிலிருந்த கொரோனாவின் பாதிப்பு மெல்ல மெல்ல கைமீறி போனதாக தெரிகிறது. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் காணப்படுகிறது.
அதிலும் இன்றைய தினம் தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் புதிய பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. மேலும் தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து நாளைய தினம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளைய தினம் ஆலோசனை நடைபெறுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக நாளைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். மீண்டும் ஊரடங்கு அறிவித்தால் என்ன செய்யலாம் என்று மக்கள் செய்வதறியாது தெரியாமல் உள்ளனர்,
