2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நாளை முதல் தடை! எங்கெல்லாம் செல்ல முடியாது?

ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசியும் மக்கள் செலுத்த வேண்டும் என்று அரசு கூறிக் கொண்டே வருகிறது.

ஆயினும் முதலிரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தாதவர்கள் ஏகப்பட்டோர்கள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு தடை உத்தரவு பிறப்பித்து கொண்டே வருகிறது.

அந்த வரிசையில் அசாம் மாநில அரசு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நாளை முதல் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. அதன்படி அசாம் மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், உணவகங்களுக்குள் நுழைய நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் சந்தைகளுக்கு செல்லவும் தடை விதித்துள்ளது. இதனை அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். அசாமில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்றும் அரசு கூறியது எனினும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment