Connect with us

நாளை வாக்கு எண்ணிக்கை-கவனமாக இருங்கள்! தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுவோம்: இபிஎஸ்

palaniswai

தமிழகம்

நாளை வாக்கு எண்ணிக்கை-கவனமாக இருங்கள்! தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுவோம்: இபிஎஸ்

நாளை வாக்கு எண்ணிக்கை-கவனமாக இருங்கள்! தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுவோம்: இபிஎஸ்

நாளைய தினம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக தொண்டர்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் இதனை போன்று எதிர்க்கட்சியான அதிமுக வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி நாளை வாக்கு எண்ணிக்கையின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

குற்ற செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவை பொறுத்தவரை எந்த நடவடிக்கையையும் சட்டரீதியாக சந்திக்க தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார்.

குற்ற செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டனர் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீதான வழக்குகளை சந்திக்க தயார் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு முடிவுகளை அறிவித்து சான்றிதழ் வழங்கிய பின்னரே அடுத்த வார்டு வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் இப்போது அனைத்து வார்டு வாக்குகளை எண்ணி முடித்த பின்னரே சான்றிதழ் கொடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள உயர்நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்து உள்ளது என்றும் அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நடந்து கொண்டால் அதிகாரிகள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஜனநாயக முறைப்படி அதிகாரிகள் முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தவறு செய்தால் நிச்சயமாக நீதிமன்றத்தை நாடுவோம் கூறினார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேட்டி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top