நாளை வைகுண்ட ஏகாதசி – அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் நாளை திறப்பு

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியே பெருமாளுக்கு உகந்த திதியாக பெரிய ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவெங்கும் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு ஆலயங்களில் எல்லாம் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படும்.

தமிழ்நாட்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், சிங்கப்பெருமாள் கோவில், ஏரிகாத்த ராமர் கோவில், திருப்புல்லாணி, அழகர் கோவில், திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட முக்கிய பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

மேலும் திருப்பதி உள்ளிட்ட கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் முண்டியடித்து கோவிலுக்குள் செல்வதை தவிர்க்கலாம்.

சமூக இடைவெளி விட்டு மாஸ்க் அணிந்து பெருமாளை தரிசித்து வரலாம் ஏனென்றால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகமான பக்தர்கள் ஒவ்வொரு கோவிலிலும் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தகக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.