Connect with us

மேட்டூர் அணையை திறந்து முல்லைப் பெரியாறு அணை;; நாளை தண்ணீர் திறக்க உத்தரவு!!

முல்லை பெரியாறு அணை

Tamil Nadu

மேட்டூர் அணையை திறந்து முல்லைப் பெரியாறு அணை;; நாளை தண்ணீர் திறக்க உத்தரவு!!

எந்த ஒரு வருடம் இல்லாத வகையில் தற்போதைய ஆண்டில் தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் கோடை காலத்திலேயே திறந்துவிடப்படுகிறது. அதுவும் குறிப்பாக மேட்டூர் அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

மேலும் மே மாதத்தில் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது இப்போதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையில் நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு கூறியுள்ளது. தேனி கம்பம் பள்ளத்தாக்கு இருபோக பகுதியின் முதல் போகத்திற்கு 200 கனஅடி, குடிநீர் தேவைக்காக 100 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நீர் திறப்பின் மூலம் உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களில் உள்ள சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் தெரிகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கோடை காலத்திலேயே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட உள்ளதால் விவசாயம் செழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top