Connect with us

நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்!!-அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு;

ஆன்லைன் வகுப்புகள்

தமிழகம்

நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்!!-அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு;

பத்து நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த சக்தி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. இதனால் மக்கள் அந்த பள்ளியின் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

மேலும் பள்ளியில் உள்ள பொருட்களையும் எடுத்துக் கொண்டு சென்றதாக தெரிந்தது. ஏனென்றால் அது பள்ளியில் படித்துக் கொண்ட மாணவி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு பற்றி உண்மை தன்மை தெரிய வேண்டும் என்பதனை மக்கள் கோரிக்கையாக வைத்து இத்தகைய கலவரத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு மாணவர்களின் மாற்று சான்றிதழ்களும் கிழித்தெரியப்பட்டது. இதனால் பள்ளி மூடப்பட்டது. மேலும் அங்குள்ள படிக்கும் மாணவர்கள் மாற்றுப் பள்ளிகளில் படிக்க வைப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது பள்ளி கல்லூரி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சில முக்கிய அறிவிப்பினை கூறியுள்ளார். அதன்படி கலவரம் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகளை தொடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top