நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இன்று விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. முதல் கட்டமாக தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை 3 மணிக்கு மேல் பள்ளிகளில் இயங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளையும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்மழை தொடர்ந்து வருவதை அடுத்து இன்னும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருவதால் நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.