Connect with us

நாளை தமிழ்நாடு நாள் விழா: யார் தலைமையில் நடைபெறும்?

1b8a9825d09676d0282d1ad689b44e18 original

தமிழகம்

நாளை தமிழ்நாடு நாள் விழா: யார் தலைமையில் நடைபெறும்?

தமிழக அரசு சார்பில் நாளை தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைப்பெறுகிறது. ஆண்டுதோறும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இவ்விழாவில் மாநில திட்டக்குழு தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெறுவதோடு குறும்படம் திரையிடம், சிறப்புக் கண்காட்சி நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டதுள்ளது.

அதே போல் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைப்பெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. விழாவின் போது பல்வேறு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தொல்லியல் துறை சார்பில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகங்கை, மயிலாடுபாறை மற்றும் கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

மேலும், மெட்ராஸ் மாகாணம் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத் தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top