நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாளையும் ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மாவட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் மழை காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment